fbpx

திடீரென்று தற்கொலை செய்து கொண்ட 14 வயது சிறுமி….! காரணத்தைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர்…!

தர்மபுரி அருகே பெற்றோர்கள் வீட்டு வேலை செய்ய சொன்னதால், வீட்டு வேலைக்கு பயந்து, 14 வயது சிறுமி தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கின்ற ஏரியூர் பகுதியில் வசித்து வரும், சுப்ரமணி என்பவரின் 14 வயதான மகள் சசிகலா அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் சிறுமி என்பதால், அடிக்கடி அவருக்கு பெற்றோர்கள் தரப்பில் வீட்டு வேலைகள் கொடுப்பது வழக்கம். ஆனால் வீட்டு வேலை செய்ய விருப்பம் இல்லாத சசிகலா, தொடர்ந்து, வீட்டில் உள்ளவர்களிடம் வேலை செய்ய முடியாது என்று சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

ஆனாலும், பெற்றோர்கள் தொடர்ந்து, அந்த சிறுமிக்கு, வீட்டு வேலை கொடுத்து வந்ததால், அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், பெற்றோர்கள், தொடர்ந்து, தனக்கு வீட்டு வேலை கொடுத்து வருவதால், அவர் ஒரு விபரீத முடிவு மேற்கொண்டார்.

அதாவது நேற்று பள்ளி விடுமுறை என்பதால், சசிகலா வீட்டில் இருந்துள்ளார். இதனால், சசிகலாவின் பெற்றோர் மகளிடம் வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து வைக்குமாறு சொல்லி விட்டு வெளியே சென்றுவிட்டதாக தெரிகிறது.

விடுமுறை நாட்களில் கூட, தன்னை வேலை செய்ய சொல்லிவிட்டு பெற்றோர்கள் வெளியே சென்று விட்டால், சசிகலா மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், வெளியே சென்ற பெற்றோர்கள் மாலை வீடு திரும்பியபோது வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெகு நேரம் கதவை தட்டி பார்த்தும் திறக்கப்படாததால், அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கே, சிறுமி சசிகலா, தூக்கிட்ட நிலையில், பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

தங்களுடைய ஆசை மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்ட பெற்றோர்கள், இருவரும் சசிகலாவின் சடலத்தை பார்த்து, கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த சிறுமி சசிகலாவின், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!… தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள்!… அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Sun Sep 24 , 2023
தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் உறுதியளித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும். […]

You May Like