fbpx

மூளையை பாதிக்கும் அறியவகை அமீபா தொற்று!… கேரளாவில் 15 வயது சிறுவன் பலி!

மூளையை பாதிக்கும் அறியவகை அமீபா தொற்று காரணமாக கேரளாவில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் பனவல்லியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இந்த நோய் அமீபா மூலம் பரவுகிறது. நாசித்துவாரங்கள் மூலம் மனித உடலுக்குள் நுழையும் இந்த அமீபா மூளையை சென்று தாக்குகிறது. இது முதன்முதலாக 2016-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியில் அசுத்தமான நீரில் குளிப்பதனாலேயே இந்நோய் பரவுவதாக தெரியவந்துள்ளது. மொத்தம் 5 பேரை தாக்கியுள்ளது. அனைவரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நோயின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் செரிசுராஸ் ஆகும்.

இதுகுறித்து பேசிய கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ், அசுத்தமான நீரில் வாழும் அமீபா மூலம் பரவும் அரியவகை மூளை நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார். மேலும் அசுத்தமான நீரில் குளிப்பதை தவிர்க்கும்படியும் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Kokila

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! ஏராளமான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது...! உடனே விண்ணப்பிக்கவும்...

Sat Jul 8 , 2023
KVB வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Development Executive & Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like