சமீபகாலமாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, என வயது வித்யாசம் பார்க்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்துள்ளனர். இதில் நன்றாக இருப்பவர்கள் திடிரென்று மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வந்து கொன்டே தான் இருக்கிறது. அவ்வகையில் ஜிம்மில் இளைஞர் டிரெட்மில்லில் ஓடும் போது திடீரென சரிந்து விழுந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சரஸ்வதி விஹாரில் ஒரு உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த உடற்பயிற்சி மையத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சித்தார்த் என்ற 19 வயது இளைஞர் திரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென நின்று மெதுவாக சுயநினைவை இழந்து அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த மற்ற நபர்கள் அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு தூக்கி சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் உடற்பயிச்சி மையத்தில் சரிந்து விழுந்தா காட்சி சிசிடிவியில் பதிவழியுள்ளது அந்த கட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது.
உயிரிழந்த சித்தார்த் நொய்டாவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் உயிரிழந்த னபபர் அவருடைய பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை என்று தெரிவிக்கப்டுகிறது. 19 வயது இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.