fbpx

கொதிக்கும் நீரில் விழுந்த 2 வயது குழந்தை பரிதாப பலி!!

குளிக்க வைப்பதற்காக வைத்திருந்த கொதிக்கும் நீரில் 2 வயது குழந்தை விழுந்து துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக்(28), என்கின்ற கூலித் தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) என குட்டி குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 10ம் தேதி, ஜெரினா மகனை குளிக்க வைக்க சுடுதண்ணீர் வைத்துவிட்டு அதை பாத்திரத்தில் கீழே வைத்திருந்தார். அதே நேரத்தில் குழந்தையும் விளையாடிக்கொண்டிருந்தது. ஜெரினா அந்த நேரத்தில்தான் குழந்தைக்கு டவல் எடுத்து வருவதற்காக வேறொரு அறைக்குள் சென்றிருக்கின்றார்.

திடீரென குழந்தை வீர் வீர் என அலறியுள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது சுடுதண்ணீரில் குழந்தை தவறி விழுந்துள்ளது. குழந்தையை உடனடியாக மீட்டு கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 5 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

துரதிர்ஷ்டம் ஒரு பக்கம் வெந்நீரால் விபத்தை ஏற்படுத்தியது. மறுபக்கம் சிகிச்சையும் குழந்தையின் உயிரை காப்பாற்றவில்லை. சிகிச்சை பலனளிக்காமல் போவதற்கு பெரும்பாலும் மருத்துவமனை நிர்வாகமும் ஒரு காரணமாக இருக்கலாம். சில அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெரும்பாலான கோரிக்கையாக உள்ளது.

Next Post

ராஜீவ் கொலையில் விடுவிக்கப்பட்டவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுமதி தர வேண்டும்… இயக்குனர் கவுதமன் கோரிக்கை!!

Wed Nov 16 , 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள் விரும்பும் நாட்டுக்கு செல்ல அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ’’முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பல முறை விடுதலை செய்ய உத்தரவிட்டும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுக்கப்பட்டதால் நீதியை நிலைநாட்டவில்லை. காலம் தாழ்த்தி வந்தநிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமே தனது […]

You May Like