காஞ்சிபுரம், சாலவாக்கம் அருகே 21 வயது இளம்பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். நேற்று இரவு 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தனது தோழிகளை பார்த்துவிட்டு சைதாப்பேட்டையில் செல்ல செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
அப்போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காரில் சாலவாக்கம் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு கடத்தி சென்ற 4 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தற்பொழுது இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.