உத்தரப்பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பக்கத்து வீட்டு பெண்ணின் ஆண் நண்பர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கூறுகையில், “எனது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சாக்லேட்டுகள், சிப்ஸ்கள் காட்டி குழந்தையை அழைத்திருக்கிறார்கள். மீண்டும் குழந்தை வீட்டிற்கு வந்தபோது ரத்தபோக்கு இருந்தது. அந்த இடத்தில் வலிக்கிறது என கூறினார்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து குழந்தையின் தாயார் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்தனர். தற்போது, சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, ஆகஸ்ட் 2024 இல், பண்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. விவரங்களின்படி, ஒரு வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசிக்கும் சிறுமியை, பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் திண்பண்டம் வாங்கி தருவதாக கூறி சந்தைக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமியின் குளிர்பானத்தில் மயக்க மருந்துகளை கலந்து, பாதிக்கப்பட்டவரை மயக்கமடையச் செய்து ஆண் நண்பர்களை அழைத்து வன் கொடுமை செய்தது குறிப்பிடத்தக்கது.
Read more ; டிகிரி போதும்.. மாவட்ட புள்ளியியல் அலுவலகத்தில் வேலை.. கை நிறைய சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?