fbpx

சோகம்…! கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு…! பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி…

பெங்களூரு நகரில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 வயதில் தீரஜ் என்ற மகன் உள்ளார். பால்ராஜ் ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த சூலில், அவர் வழக்கம் போல உணவு டெலிவரியில் ஈடுபட்டு வந்தார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர், தான் ஆர்டர் செய்து இருந்த கேக்கை கேன்சல் செய்தார். பால்ராஜ் அந்த கேக்கை தனது வீட்டிற்கு எடுத்து வந்து தனது 5 வயது மகனுக்கு கொடுத்துள்ளார்.

மீதம் உள்ள கேக்கை பால்ராஜ் மற்றும் அவரது மனைவி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் கேக் சாப்பிட்ட மூன்று பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி 5 வயது சிறுவன் தீரஜ் உயிரிழந்தான். பல்ராஜ் மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்து கஸ்டமர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபுட் பாய்சன் காரணமாக சிறுவன் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடார்பாக பெங்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ; துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) கிரிஷ் முதற்கட்ட விசாரணையில், பெற்றோர்கள் பழைய உணவை சாப்பிட்டதால், உணவு விஷமாகி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அவர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்களை நாங்கள் சேகரித்து சோதனைக்கு அனுப்புவோம் என்றார் .

English Summary

A 5-year-old boy died after eating cake in Bengaluru.

Vignesh

Next Post

இதற்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பு... பெற்றோர்களுக்கு அறிவுறுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...!

Wed Oct 9 , 2024
Teachers are responsible for this... Department of School Education orders to advise parents

You May Like