விழுப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி தான் வசித்து வரும் அதே பகுதியில் உள்ள துவக்க பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறுமி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை பார்த்த ஆசிரியருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் நல அலுவலரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, அச்சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அங்கு நடந்த சோதனையில் அச்சிறுமிக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அதே பகுதியை சேர்ந்த 14 மற்றும் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தன்னை போலவே மேலும் 4 பெண் குழந்தைகளுக்கு அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சிறுமி கூறியிருக்கிறார். இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். புகாரின் பேரில் 4 சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வருகிறோம். அவர்களுக்கு ஆபாச படங்களை காட்டி ஆபாசமாக அவர்களை வீடியோ எடுத்து அதை வலைத்தளங்களில் பதிவேற்றமும் செய்து வருகிறோம் என்று விசாரணையில் கூறியிருக்கிறார்கள்.
இதைக் கேட்டு அதிர்ந்துபோன விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் கைது செய்து இளஞ்சிரார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி இருக்கிறார்கள். நீதிபதியின் உத்தரவை அடுத்து கடலூர் கூர்நோக்கி இல்லத்தில் 4 பேரும் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.