fbpx

6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம்.. பகீர் தகவல்கள்..

ஹரியானாவின் பானிபட் பகுதியில் உள்ள வாய்க்கால் அருகே ஒதுக்குப்புறமான பகுதியில் நேற்று முன் தினம் 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.. சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அங்கிருந்த தொழிற்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குழந்தையை கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.. இந்த காட்சிகளின் அடிப்படையில் 40 வயது புலம்பெயர்ந்த தொழிலாளியை போலீசார் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஈஸ்வர் சிங் என்பதும் அவர் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் கடந்த 15 ஆண்டுகளாக பானிபட்டில் வசித்து வந்ததாகவும், அங்குள்ள தாபா ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பானிபட்டில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தனது தம்பியுடன் 6 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​​​அவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஈஸ்வர் சிங்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியானது.. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, செக்டார் 29 இல் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது, ​​பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி, சிறுமியை அழைத்துச் சென்றதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்… பின்னர் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாகவும் கூறியுள்ளார்..

சிறுமியின் உடல் பானிபட்டில் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், பாலியல் வன்கொடுமைக்கு பின், குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பானிபட்டில் உள்ள செக்டார் 25ல் உள்ள ஜிம்கானா கிளப் அருகே கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் அவர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Maha

Next Post

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன..?

Wed Aug 17 , 2022
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.38,792-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

You May Like