fbpx

5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்..!! நேரில் பார்த்த தாய் அதிர்ச்சி..!!

7 வயது சிறுவன் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த ஹெடாட் பகுதியில் 5 வயது சிறுமி விளையாட சென்றுள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த 7 வயது சிறுவன் அந்த சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, விளையாட சென்ற தனது மகளை வீட்டிற்கு அழைத்துவர தாய் சென்றுள்ளார். அப்போது, அந்த சிறுவனின் செயலை நேரில் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

திகிலூட்டும் ரயில் நிலையம்..!! வெள்ளை நிற சேலையில் இறந்த சிறுமி..!! ஸ்டேஷன் மாஸ்டர் குடும்பம் மர்ம மரணம்..!!

Wed Sep 20 , 2023
மேற்கு வங்க மாநிலம் புருஸலியா மாவட்டத்தில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சி பிரிவில் உள்ள கோட்ஷிலா – முரி பிரிவில் அமைந்துள்ளது பெகுன்கோடர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் 42 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் மூடியே கிடக்கிறது. 1960களில் சந்தலின் ராணி லச்சன் குமாரியின் முயற்சியால் இந்த ரயில்நிலையம் கட்டப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி 6 ஆண்டுகள் வரை மட்டுமே நீடித்தது. […]

You May Like