fbpx

7.3 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை!… 42 வயதில் பெற்றெடுத்த அதிசயம்!… மருத்துவர்கள் விளக்கம்!

பிரேசில் நாட்டில் 42 வயதுடைய பெண் ஒருவர் 7.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தையின் சராசரி எடை 3.3கிலோ, பெண் குழந்தையின் சராசரி எடை 3.2 கிலோ ஆக இருக்கும். ஆனால் பிரேசில் நாட்டின் பார்ண்டின்ஸ் பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ என்னும் மருத்துவமனையில் 42 வயதுடைய க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 10 நாட்களுக்கு முன்பு இவருக்கு 7.3 கிலோ எடைக் கொண்ட ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த குழந்தைக்கு அங்கர்சன் சாண்டோஸ் என்று பெயரிட்டுள்ளனர். அங்கர்சன் பிறக்கும்போதே அதன் கை அளவிற்கு, 2 அடி உயரத்தில் பிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கர்சன் போன்று அதிக எடையில் பிறக்கும் குழந்தைகளை மேக்ரோசோமியா (கிரேக்க மொழியில் பெரிய உடல் என பொருள்) என அழைக்கப்படுகிறது.

பொதுவாக, 4 கிலோவை தாண்டி பிறக்கும் குழந்தைகளை மேக்ரோசோமியா என்று மருத்துவ ரீதியில் அழைக்கப்படுகிறது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் அதிக எடையுடன் குழந்தை பிறந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். அதில், குழந்தையின் தாய், கடுமையான நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக இவருக்குப் பிறந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது.

இதற்கு காரணம் தாயின் இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் அதிகரிப்பால், சிசுவுக்குச் செல்லும் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும். இதனால் குழந்தை அதிக வளர்ச்சியை ஏற்படுத்தும் மேக்ரோசோமியாவால் பாதிக்கப்படும். தாயின் நீரிழிவு நோயே குழந்தையின் இப்பிரச்னைக்கு காரணம்’ என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 1955 ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு 10.2 கிலோ எடையில் பிறந்த குழந்தை, உலகின் அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்று கூறப்பட்டுவது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

சப்போட்டா சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் அடியோடு நீங்கிவிடும்!... மருத்துவ பயன்கள் இதோ!

Wed Feb 22 , 2023
நார்ச்சத்து உள்ள சப்போட்டாவை சாப்பிடுவதால், குடல் இயக்கங்கள், மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும். மேலும், ரத்த அழுத்தம், இதய கோளாறு, சரும பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கிறது இயற்கையாகவே அதிக இனிப்பு சுவை கொண்ட பழ வகைகளில் சப்போட்டாவும் ஒன்று. பனிக்காலத்தில்தான் இந்த பழத்தை அதிகம் பார்க்க முடியும். எளிதில் செரிமானிக்கக் கூடிய இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி நீங்கள் சுவைத்து […]

You May Like