fbpx

நகைப்பிரியர்களுக்கு மிகப்பெரிய ஷாக்.. ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.42,160க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

எனவே தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.5,270க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.42,160க்கு விற்பனையாகிறது.. எனினும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.40 குறைந்து ரூ.68.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700க்கு விற்பனையாகிறது.. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.640 உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்..

Maha

Next Post

குடிபோதையால் வந்த தகராறு……! கொலையில் போய் முடிந்தது ஓசூரில் பரபரப்பு…..!

Sat Mar 11 , 2023
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள அடவி சாமிபுரம் கிராமம் அருகே உள்ள கிரஷர் பகுதியில் வெங்கடேசன், மோகன் உள்ளிட்ட 6️ பேர் மது அருந்தி உள்ளனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெங்கடேசனை மோகன் என்பவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார்.இந்த சூழ்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேசனை அருகில் இருந்த நபர்கள் மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி […]

You May Like