திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அரசு பேருந்து மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
பேருந்து மீது இருசக்சர வாகனம் மோதியதால் அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கியதால் பேருந்தில் இருந்தவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.