அப்படி போடு… இது யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு…! எதிர்க்கட்சிகள் சார்பில் அதிரடியாக களம் இறக்கப்பட்ட வேட்பாளர்…! மீளுமா பாஜக…?

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தங்கரை சனிக்கிழமை அறிவித்தது. ஜக்தீப் தங்கர் தற்போது மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துகொண்ட பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். முன்னதாக குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!

Vignesh

Next Post

மிஸ் பண்ணாதீங்க... மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை திட்டம்…! இன்றே கடைசி நாள்… உடனே இதை செய்து முடிக்க வேண்டும்…!

Mon Jul 18 , 2022
தமிழக அரசு அறிவித்த அரசு பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகைக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தொடங்கியது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவிகள் […]

You May Like