fbpx

பெண்களுக்கு அள்ளிக் கொடுக்கப்போகும் பட்ஜெட்!. சிறப்பு முதலீட்டு திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு!.

Budget 2025: பெண்களின் வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை கவனம் செலுத்தும் மையமாக பட்ஜெட் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அந்தவகையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதியான இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சி மற்றும் மேம்பட்டை கருத்தில் கொண்டு பல அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அதாவது உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலுப்படும் என்றும் கூறினார்.

பெண்களின் வளர்ச்சி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை கவனம் செலுத்தும் மையமாக இருக்கும் என்று பிரதமர் பேசினார். பட்ஜெடில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மட்டும் இல்லாமல் வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தை மேம்படுத்தவும், பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் மிஷன் சக்தி, மாத்ரு வந்தனா யோஜனா மற்றும் ஜனனி சுரக்ஷா யோஜனா போன்ற திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

முந்தைய பட்ஜெட்டில், இந்தத் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு இதை விட அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் முத்ரா யோஜனா போன்ற திட்டங்கள் ஏற்கனவே பெண்களுக்கு நிதி சுதந்திரத்துடன் அதிகாரம் அளித்துள்ளன. இந்த முயற்சிகளுக்கான அதிகரித்த நிதி தொழில்முனைவோர் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர். கூடுதலாக, மகிளா சம்மன் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைவதால் அதை நீட்டிக்கலாம் என்றும், பெண்களுக்கான புதிய முதலீட்டு சலுகைகளை திட்டங்களை அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Readmore: புதிய வீடு வாங்கப்போறீங்களா?. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?.

English Summary

A budget that will give a lot to women!. Opportunity to announce special investment projects!.

Kokila

Next Post

ஈரோடு கிழக்கு தேர்தல்... 3-ம் தேதி மாலை பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும்...! தேர்தல் ஆணையம் உத்தரவு

Sat Feb 1 , 2025
Campaigning for the by-elections should conclude by the evening of the 3rd.

You May Like