fbpx

சொதப்பிய கூகுள் மேப்.. கால்வாயில் மூழ்கிய கார்.. பின்னர் நடந்தது என்ன..?

கேரளாவில் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி சென்ற கார் கால்வாயில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கேரளாவில் வசித்து வரும் மருத்துவர் சோனியா தனது மூன்று மாத மகள், தாய் சோசம்மா மற்றும் மற்றொரு உறவினருடன் கும்பநாடுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். கார் ஓட்டுநர் கூகுள் மேப்பின் வழிகாட்டுதலை பின்பற்றி காரை ஓட்டியுள்ளார்.. பாராச்சல் என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயை அடைந்ததும், நேராக வாகனம் ஓட்ட கூகுள் மேப் பரிந்துரைத்த நிலையில், மேப் எந்த இடத்தை நோக்கிச் செல்கிறது என்பதை ஓட்டுநர் கவனிக்கவில்லை..

அதாவது சாலையின் வளைவை ஓட்டுநர் கவனிக்காததால், கார் கால்வாயில் மூழ்கியது.. ஆனால் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கார் கால்வாயில் கவிழ்ந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து குடும்பத்தினரை மீட்டனர். காரை கயிற்றால் கட்டி தண்ணீரில் இருந்து வெளியே எடுத்தனர்.

கூகுள் மேப் காரணமாக வழி தவறி செல்வது இது முதன்முறையல்ல.. ஏற்கனவே பல முறை கூகுள் மேப் காரணமாக, மக்கள் தங்கள் இலக்கைத் தவறவிட்ட அல்லது முற்றிலும் தொலைந்து போன பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

’தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம்’..! - முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

Wed Aug 10 , 2022
தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 44-வது செஸ் ஒலிம்பியாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”4 மாதத்தில் உலகமே வியக்கும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தமிழ்நாடு அரசு நடத்தி முடித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப இந்த […]
’தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம்’..! - முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு

You May Like