fbpx

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… பாஜக எம்.பி மகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.! நடந்தது என்ன.?

திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக பாஜக எம்.பி யின் மகன் மீது இளம் பெண் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தேவேந்திரப்பா(71), இவரது மகன் ரங்கநாத் (42), திருமணமான இவர் மைசூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மீது 24 வயதான இளம் பெண் ஒருவர் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார்.

அந்தப் புகாரில் நண்பர் ஒருவரின் மூலம் தனக்கு அறிமுகமான ரங்கநாத் தன்னை திருமணம் செய்வதாக கூறி மைசூரில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அழைத்து உல்லாசமாக இருந்ததாகவும் தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரங்கநாத் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனது பெயரை கெடுக்க சதி நடப்பதாக கூறி அந்த இளம் பெண்ணின் மீது ரங்கநாத் மைசூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதற்கு பதில் அளித்திருக்கும் காவல்துறை தகுந்த ஆதாரங்களுடன் விசாரணைக்கு வரும்படி அவருக்கு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் அந்த இளம் பெண் எம்பி தேவேந்திரப்பா மற்றும் அவரது மகன் ரங்கநாத் ஆகியோரிடம் நியாயம் கேட்டு பேசிய ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Kathir

Next Post

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு..! மருத்துவமனையில் அனுமதி..!

Sat Nov 18 , 2023
தேமுதிக கட்சியின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரிக்கமுடியாத நடிகராகவும் கேப்டன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட […]

You May Like