fbpx

கிணற்றுக்குள் விழுந்த பூனை… மீட்க முயன்ற 5 பேர் பலி!

பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே இறங்கிய 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் கிராமத்தில் உபயோகமற்ற கிணற்றில் நேற்று மாலை பூனை ஒன்று விழுந்துள்ளது. அந்த பூனையை காப்பாற்றுவதற்காக ஒருவர் கிணற்றில் இறங்கியுள்ளார். கிணற்றின் விஷ வாயு தாக்கி அந்த நபர் மயக்கமடைந்துள்ளார்.

இதனை கண்ட மற்றொருவர் அவரைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கியுள்ளார். இவ்வாறாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒருவரையொருவர் காப்பாற்ற கிணற்றுக்குள் இறங்கியிருக்கின்றனர். ஐந்து பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், 6 வதாக உள்ளே இறங்கிய நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிணறு முழுவதும் சேறு சகதி அதிகம் இருப்பதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும், விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கிணறு எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Post

JOBS | 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை.!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!!

Wed Apr 10 , 2024
JOBS: மத்திய அரசு வங்கியான இந்தியன் வங்கியில்(INDIAN BANK) காலியாக உள்ள தங்க நகை மதிப்பீட்டாளர்((GOLD JEWELERY APPRAISER) பணியிடங்களை அனுப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை இந்தியன் வங்கி வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு தங்க நகை மதிப்பீட்டாளர் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி தங்க நகை மதிப்பீட்டாளர்(GOLD JEWELERY […]

You May Like