உலக அழகி போட்டியில் பங்கேற்றுள்ள தாய்லாந்து மாடலின் உடை உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
71-வது உலக அழகிப் போட்டி வரும் இன்று திகதி நியூ ஆர்லியன்ஸில் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டுள்ளனர். தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரிய ஆடையை அணிந்து போட்டியாளர்கள் வரவேண்டும். அந்த வகையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அன்னா சுயங்கம் என்ற மாடல், குப்பையில் வீசப்பட்ட கூல்டிரிங்ஸ் பாட்டில் மூடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது மேடையில் பேசிய அவர், குப்பை அழகு ராணி என்று தான் அழைக்கப்படுவதாகவும் ஆனால் தான் ஒரு அழகியாக ஜொலிப்பதை அது தடுக்கவில்லை என்றார். மேலும் தங்களது பெற்றோர் துப்புறவு பணியாளர்கள் என்பதை மேடையில் பெருமையுடன் கூறினார். இந்த நிலையில், 24 வயதான அழகி அன்னா சுயங்கத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.