மனித உடலுக்கு இதயத்தின் செயல்பாடு எவ்வளவு முக்கியமோ அதே அளவு ரத்த ஓட்டமும் முக்கியமான ஒன்றாகும். நமது உடல் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை இதயத்திற்கு எடுத்து வருவதன் மூலம் உடலின் சீரான இயக்கத்திற்கு உதவுகிறது. இரத்த சுத்திகரிப்பு என்பது நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதாகும். இதன் மூலம் உடலை நோய்களிலிருந்து பாதுகாப்பதோடு ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
நம் இரத்தத்தை இயற்கையான முறையில் சுத்திகரிக்க கூடிய சில உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பூண்டு ரத்தத்தை சுத்திகரித்து அதில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்கு சிறந்த உணவாகும். இதில் இருக்கக்கூடிய அலிசின் என்ற சல்பர் கலவை ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது ரத்த நாளங்களில் கொழுப்புகள் படியாமலும் தடுக்கிறது. பூண்டுகளில் இருக்கக்கூடிய கிருமிய எதிர்ப்பு பண்புகள் நம் ரத்தத்தில் திருப்பித் தொற்றுகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
கொத்தமல்லி இலைகள் இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய மற்றும் ஒரு சிறந்த உணவு பொருளாகும். இவற்றை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மஞ்சளும் ரத்தத்தை சுத்திகரிக்க கூடிய ஒரு சிறந்த உணவு பொருளாக விளங்குகிறது. இவற்றில் இருக்கக்கூடிய குர்குமின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதும் தடுக்கப்படுகிறது.
பச்சை மிளகாய் இரத்தத்தை சுத்திகரிக்க கூடிய மற்றொரு சிறந்த உணவு பொருளாகும். மிளகாயின் காரத்திற்கு காரணமான கேப்சைசிண் என்ற அமிலம் ரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் மிளகாயில் இருக்கக்கூடிய அமிலங்கள் உடலில் டெஸ்டோஸ்டிரான் அளவைக் கூட்டுகிறது. இதன் காரணமாக ரத்த ஓட்டம் சீர்பட உதவி புரிகிறது.