fbpx

“அய்யய்யோ….அந்தரங்க உறுப்பை அறுத்து படுகொலை!முக்கோண காதலின் விளைவு!

தெலுங்கானா மாநிலத்தில் காதலிக்கு தொல்லை கொடுத்த நண்பனை கல்லூரி மாணவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாவட்டம் நன்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர்கள் ஹரிஹர கிருஷ்ணன் மற்றும் நவீன். இவர்கள் இருவரும் நண்பர்கள்.நவீன் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். நண்பர்களான இருவரும் அந்தக் கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளனர். தனது காதலை அந்த பெண்ணிடம் நவீன் முதலில் வெளிப்படுத்தி இருக்கிறார். அந்தப் பெண்ணும் நவீனின் காதலை ஏற்றுக் கொண்டதால் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நவீனும் அந்தப் பெண்ணும் பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து வெகு நாட்கள் கழித்து ஹரிஹர கிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது காதலனை பிரிந்து வெகு நாட்களாகியதால் அந்தப் பெண்ணும் இவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நவீன் தனது காதலியை மறக்க முடியாமல் அவருக்கு தொடர்ந்து செல்போன் மூலம் அழைத்து தொந்தரவு செய்து இருக்கிறார். மேலும் வாட்சப் போன்றவற்றின் மூலம் மெசேஜ் செய்திருக்கிறார். இதனைத் தவிர்க்கும் படி அந்தப் பெண் வேண்டுகோள் விடுத்தும் அதனை ஏற்காமல் இவ்வாறு தொந்தரவு செய்து வந்திருக்கிறார் நவீன். இதனால் பயந்து போன அந்தப் பெண் தனது காதலன் ஹரிஹர கிருஷ்ணனிடம் இந்த விஷயம் தொடர்பாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது காதலிக்கு தொல்லை கொடுத்து வரும் நண்பனை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார் ஹரிஹர கிருஷ்ணன். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அன்று தனது வீட்டிற்கு வருமாறு நண்பன் நவீனை அழைத்திருக்கிறார் ஹரி. பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் பேடா அமர்பேட் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று இருக்கின்றனர். அங்கு சென்று மது அருந்திய போது காதலி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது கொலை செய்யும் நோக்கத்துடன் சென்ற ஹரிஹர கிருஷ்ணன் தான் வைத்திருந்த கத்தியால் தனது நண்பனை குத்தி கொலை செய்திருக்கிறார். அவரை கொலை செய்த பின்பும் ஆத்திரம் தீராத அந்த இளைஞர் நண்பனின் உடலை இரண்டாக வெட்டியும் அவரது இதயத்தை வெளியே எடுத்தும் கொடூரமாக நடந்துள்ளார். மேலும் நவீன் என்ற மாணவரின் அந்தரங்க உறுப்பையும் துண்டித்திருக்கிறார். அவரை கொலை செய்து முடித்த பின் இவற்றையெல்லாம் புகைப்படம் எடுத்து தனது காதலிக்கும் செல்போன் மூலம் அனுப்பி இருக்கிறார். இந்த கொலை நடந்து 9 நாட்களுக்கு பிறகு தானாகவே சென்று காவல்துறையில் சரணடைந்துள்ளார் ஹரிஹர கிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறை கொலை செய்யப்பட்ட நவீனின் உடலையும் அப்பகுதியில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.

Baskar

Next Post

பீகாரில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! கூட்டு பாலியல் வன்புணர்வு! மூன்று பேர் கைது!

Sun Feb 26 , 2023
பீகார் மாநிலத்தில் மூன்று சிறுவர்கள் சேர்ந்து பத்து வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் புத்தகயா மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பீகார் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் அங்குள்ள காவல் நிலையம் அருகே இருக்கும் பால்பண்ணை பகுதியில் சென்று கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மூன்று சிறுவர்கள் சிறுமியை கடத்திச் […]

You May Like