fbpx

ரெடியா இருங்க…! ஆன்லைன் மூலம் 4 கட்டங்களாக தேர்வு…! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த நமர்களுக்கு இன்று கம்பியூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகத் துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகங்கள் மற்றும் மண்டல வளாகங்களுக்கான தற்காலிக தமிழ் ஆசிரியர்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட உங்களின் விண்ணப்பங்கள் தொடர்பாக, தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேர்வு இன்று விவேகானந்தா அரங்கம், அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 பிரிவுகளாக நடத்தப்படும். தேர்வு வினாத்தாள் விடையை தேர்ந்தெடுக்கும் வகையிலான மற்றும் ஒவ்வொரு கேள்வியும் ஒரு மதிப்பெண் கொண்ட 60 வினாக்கள் இருக்கும். அவற்றில் ஏதேனும் 45 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு நான்கு தவறான விடைகளுக்கும் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

45-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டால், பதிலளிக்கப்பட்ட கேள்விகளில் முதல் 45 கேள்விகளுக்கு மட்டுமே மதிப்பீடு செய்யப்படும். தேர்விற்கான பாடத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது, விளம்பரப்படுத்தப்பட்ட பதவிகளின் எண்ணிக்கையின்படி 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு தேர்வர்களை சுருக்கமாகப் பட்டியிலிடுவதற்காக மட்டுமே. நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்றே தேர்வு மையத்திற்கு வெளியே அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். மேலும் நேர்காணலின் மதிப்பீட்டில், இந்த தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு எந்தவித பங்களிப்பும் அளிக்கப்பட மாட்டாது. தேர்ந்தெடுத்தல் நேர்காணல் செயல்திறன் அடிப்படையிலேயே இருக்கும்.

’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு..!! புதிய தேதி அறிவிப்பு..!!

நேர்காணலுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு நேர்காணல் தேதி குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்துகொள்வதற்கு பயணப்படி வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழ்களையும் மற்றும் ஆதார் அடையாள அட்டையையும் தேர்வு மையத்தில் சரிபார்ப்பிற்க்காக சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் தேர்வின் போது துணை எழுத்தர் தேவைப்படும் பட்சத்தில் மின்னஞ்சல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து இருக்க வேண்டும். மேலும் அவர்கள் கடைசி தொகுப்பில் (தொகுதி-IV- 3.00 p.m to 6.00 p.m) அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்தவுடன் மதிப்பெண்கள் உடனே அறிவிக்கப்படும் மற்றும் அதில் விண்ணப்பதாரர்கள் கையொப்பம் இட வேண்டும்.

Vignesh

Next Post

ஜோ பிடன், ரிஷி சுனக் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்த பிரதமர் மோடி..

Sat Feb 4 , 2023
சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி, உலகத் தலைவர்களின் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.. Morning consult என்ற ஆய்வு நிறுவனம் ஜனவரி 26 முதல் 31 வரை நடத்திய ஆய்வில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உட்பட 22 உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ள தரவரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 78 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டுடன் மோடிக்கு முதலிடம் […]

You May Like