fbpx

காசநோயால் பாதிக்கப்பட்ட கள்ளக்காதலன்..!! பழகுவதை நிறுத்திய கள்ளக்காதலி..!! ஆத்திரத்தில் அடித்துக்கொன்ற கொடூரம்..!!

தேனி மாவட்டம் டி கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். கூலித்தொழிலாளியான இவரின் மனைவி செல்வி. 45 வயதான அவர் நேற்று முன்தினம் புல் அறுப்பதற்காக வடபுதுப்பட்டி அழகர் கோயில் கருட பகுதிக்குச் சென்றுள்ளார். காலையில் புல்லறுக்க சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அல்லிநகரம் போலீசில் சென்று உறவினர்கள் புகாரளிக்க போலீசார் தேடி வந்த போது புல் அறுக்கும் இடத்தில் தலையில் வெட்டு காயத்துடன் சடலமாக கிடந்துள்ளார் செல்வி. அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போதுதான் செல்விக்கும் சருத்துப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த இருளப்பன் (60) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே 4 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்துள்ளது. இதன் பின்னர் போலீசார் இருளப்பனை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் தனக்கு காச நோய் பாதிப்பு வந்து விட்டதால் தன்னுடன் பேசுவதை செல்வி மறுத்துவிட்டார் . தன்னுடன் பழகுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்து கட்டையால் அடித்து அவரை கொலை செய்து விட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இருளப்பன் அளித்த வாக்குமூலத்தின் படி காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

Chella

Next Post

12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நாளை விநியோகம்…! வெளியான புதிய அறிவிப்பு…..!

Thu May 11 , 2023
கடந்த 8ம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முக்கியமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் இது தொடர்பாக பள்ளி தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, 12 ஆம் […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like