கரூரில் பசு மாடு ஒன்று இரண்டு கன்றுகளை பிரசவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக அரிதான நிகழ்வாக, ஒரே பிரசவத்தில் பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. கரூர் மாவட்டம், வீரசிங்கம்பட்டி பகுதியை , சேர்ந்தவர் காளிதாஸ்; விவசாயியான இவர், தனது வீட்டில் பசு மாடு வளர்க்கிறார். சினையாக இருந்த மாடு கன்று ஈன்றது. நேற்று முன்தினம் இரண்டு கன்றுகளை பிரசவித்தது. இதில், இரண்டு காளை கன்றுகளை ஈன்றதாக சொல்லப்படுகிறது. இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
பொதுவாக பசு மாடு சினையுற்றால், ஒரு கன்று மட்டும் ஈனும். இதுபோல், இரண்டு கன்றுகள் பிரசவிப்பது அரிதானது. பசுவையும், அது ஈன்ற இரண்டு கன்றுகளையும், பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.