கன்று வீச்சு நோய் தடுப்பூசி மருந்துகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; கன்றுவீச்சு நோய் ப்ரூசெல்லா அபார்ட்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில் கன்றுவீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு வராமல் தடுக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி […]

புதுச்சேரியில் மாடுகளை ரோட்டில் திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சாலைகளில் முதல் முறையாக மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு ரூ.3,500 அபராதம்; 2ஆம் முறையாக மாடுகளை திரியவிட்டால் ரூ.12,000 அபராதம் விதிக்கப்படும். முதற்கட்டமாக புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒலிப்பெருக்கி மூலம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தலைமை செயலகம், அருங்காட்சியகம், சந்தை ஓட்ட பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இதனால் மாட்டின் […]

ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கூட்டுறவுக் கடன் ரூ.1,500 கோடி வழங்கப்படும். இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகின்றன. வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பு (ஆடு, மாடு கோழி) மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளுக்கு […]

காஞ்சிபுரம் மாவட்டம், கால்நடை பராமரிப்புத் துறை, தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நான்காம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இது ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான கால் மற்றும் வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகளில் இறப்பும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், […]

கரூரில் பசு மாடு ஒன்று இரண்டு கன்றுகளை பிரசவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிக அரிதான நிகழ்வாக, ஒரே பிரசவத்தில் பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. கரூர் மாவட்டம், வீரசிங்கம்பட்டி பகுதியை , சேர்ந்தவர் காளிதாஸ்; விவசாயியான இவர், தனது வீட்டில் பசு மாடு வளர்க்கிறார். சினையாக இருந்த மாடு கன்று ஈன்றது. நேற்று முன்தினம் இரண்டு கன்றுகளை பிரசவித்தது. இதில், இரண்டு காளை கன்றுகளை ஈன்றதாக […]

கால்நடை பராமரிப்பிற்காக வட்டியில்லா கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கால்நடை பராமரிப்புக்கான நடைமுறை மூலதனக் கடன் வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி மேற்படி நடைமுறை […]

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினரின்‌ பொருளாதார மேம்பாட்டிற்கு கடன்‌ பெற விண்ணப்பங்கள்‌ வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்‌ பொருளாதார சமேம்பாட்டுக்கழகத்தின்‌ கீழ்‌ பிற்படுத்தப்பட்டோர்‌, மிகப்பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்கள்‌ சுயதொழில்‌ செய்து பொருளாதார மேம்பாடு அடைய 2023-ஆம்‌ நிதியாண்டிற்குரிய கடன்‌ திட்டங்கள்‌ வழங்குவதற்கான விண்ணப்பங்கள்‌ மனுதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. சிறு தொழில்கள்‌ மற்றும்‌ வியாபாரம்‌ செய்ய பொது காலக்கடன்‌, பெண்களுக்கான புதிய […]

காணாமல் போன பசுவை கண்டுபிடிக்க கோரி வினோதமான முறையில் மனு அளிக்க வந்த நபரால் விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகே கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டி என தனது வீட்டில்  நிறைய கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். அவர் வளர்த்து வரும் பசு மாடு ஒன்று காணாமல் போய் உள்ளது. விவசாயி கோவிந்தன் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாட்டுக் […]

தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள மாடுகளுக்கு தோல்கழலை நோயின்‌ அம்மைநோய்‌ தாக்கம்‌ பரவலாக ஏற்பட்டு கால்நடைகளுக்கு பெரும்‌ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நோயினை கட்டுப்படுத்தும்‌ நடவடிக்கையாக கால்நடை பராமரிப்புத்துறையின்‌ மூலமாக மாவட்டத்திலுள்ள 3,50,000 மாடுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும்‌ பொருட்டு 3,86,500 டோஸ்கள்‌ தடுப்பூசி மருந்துகள்‌ பெறப்பட்டு தடுப்பூசிப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்கள்‌ மூலமாகவும்‌,கால்நடை மருந்தகங்கள்‌ மூலமாகவும்‌, இதுவரை 1,63,600 டோஸ்கள்‌ தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாடுகளுக்கு […]

மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கால்நடைகளை வளர்ப்பவர்களின் இல்லத்திற்கே விரைவாக சென்று இலவசமாக மருத்துவ சேவை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் 29 நடமாடும் கால்நடை மருத்துவமனைகளையும், மையப்படுத்தப்பட்ட கால் சென்டரையும் திறந்து வைத்து பின் பேசிய அவர், இந்த புதிய சேவையின் மூலம் அதிகளவில் உற்பத்திப் பொருட்களை தரும் கால்நடைகளை வளர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படும். பொதுவாகவே கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள […]