fbpx

ரிஷிவந்தயம் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த சடலம்…..! அதிர்ந்து போன பொதுமக்கள் காவல்துறையினர் அதிரடி விசாரணை…..!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கின்ற ரிஷிவந்தியம் அரசு மேல்நிலை பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. அந்த நிழற்குடைக்கு பின்னால் கழிவுநீர் கால்வாய் ஒன்று இருக்கிறது.

அந்த கழிவு நீர் கால்வாயில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த வாலிபர் யார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி உயிரிழந்தார் என்று பல்வேறு விதத்தில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

25 லட்சம் அட்வான்ஸ் கேட்ட ஓனர்; வாடகை கொடுக்க கிட்னியதான் விற்கணும்..!

Sat Jul 29 , 2023
இந்தியாவின் டெக் நகரமாக கருதப்படும் பெங்களூர்வாசிகள் சமீப காலமாகவே அதிகமாக வாடகை பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். பொதுவாகவே டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் வாழ்வதற்கான செலவு அதிகம் என்ற நிலைதான் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெங்களூரில் வீட்டு வாடகைகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பெங்களூரில் வீடு தேடி பிடிப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. பல வீட்டு உரிமையாளர்களும் வீடு வாடகைக்கு வருபவர்களிடம் பிறப்பு சான்றிதழ் முதல் […]

You May Like