fbpx

மீண்டும் ஒரு புயல்…! உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை..‌.! எல்லாம் உஷாரா இருங்க…!

கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இதன் காரணமாக இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

17-ம் தேதி வரை லட்சத் தீவுப் பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அடேங்கப்பா..‌! 2023-ம் ஆண்டு 120 நாட்கள் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை...! வெளியான புதிய பட்டியல்...!

Wed Dec 14 , 2022
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வர இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் அடுத்த ஆண்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் அரசு விடுமுறை என்ற விவரத்தை உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு 120 நாட்கள் விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இவற்றில் 53 ஞாயிறுகளும் […]

You May Like