சுமத்ரா தீவுகளை ஒட்டி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த சுழற்சி அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என டெல்டா வானிலை நிபுணர் ஹேமச்சந்தர் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்; சுமத்ராவை ஒட்டிய தெற்கு வங்ககடல் பகுதியில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இச்சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் தாழ்வு பகுதியாக மாறக்கூடும். தமிழகத்தில் […]

மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுரைகளின்படி, ‘மிக்ஜாம்’ புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி […]

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் ஒருங்கிணைந்து மின்சாரம் தடைபட்ட இடங்கள் / தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இது குறித்து தலைமைச் செயலாளர்களின் தொல்ல செய்தி குறிப்பு; புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள்/தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய பின்னர், பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் […]

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் […]

தமிழகத்தை தாக்கிய புயல் மற்றும் வெள்ளம் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது கடும் புயல் மழையால் சென்னை தத்தளித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக அரசின் நிர்வாக வின்மையை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் திமுக அரசை விமர்சித்திருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி […]

சென்னை மற்றும் அதனை சுற்றி இருக்கும் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. மழை நின்று சில தினங்களாகியும் மீட்பு பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீர் இன்னும் வெளியேற்றப்படவில்லை. பொதுமக்கள் அடிப்படை தேவைகளான உணவுக்கும் குடிநீருக்கும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் […]

இது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய பயிற்றுநர் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 03/2023, நாள் 25.10.2023 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 07.12.2023 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிக்ஜாம் […]

மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 7-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. மேலும், புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் […]

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழை நாள் மக்களின் இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது. நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் திமுக அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கிறது எனவும் இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை திமுக அரசு […]

சென்னை, திருவள்ளூர் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னையே தண்ணீரில் தத்தளித்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் வற்றாத நிலையில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மழை பாதிப்புகள் குறையாததால் இன்றும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. […]