fbpx

நிலத்திற்கு அடியே வித்தியாசமான நகரம்.. தேவாலயம் முதல் திரையரங்கு வரை அனைத்து வசதிகளும் இருக்கு..!! எங்கே தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் ஆகியவைகளுடன் ஒரு கிராமம் இருப்பது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் பேடி கிராமம் அமைந்துள்ளது. முன்னதாக, 1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுப்பதற்காக பல்வேறு சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதையடுத்து, தாதுக்கள் இல்லாத சுரங்கங்களை, அதில் வேலை செய்யும் மக்கள் வசிக்க பயன்படுத்தத் தொடங்கினர்.

இருப்பினும், குளிர்காலத்தில் வெப்பநிலை சீராக இருப்பதாலும், கோடைக்காலங்களில் வெப்பநிலை 45 டிகிரியை விட அதிகமாகும் என்பதாலும், வெப்பத்தை தாங்கமுடியாமல் மக்கள் அடிப்படை வசதிகளோடு வீடுகளை கட்டி சுரங்கத்திற்குளேயே வசித்து வருகின்றனர். படிப்படியாக, சுமார் 1500 வீடுகள் , அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியகம், பார் மற்றும் ஹோட்டல் என அனைத்தையும் சுரங்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளனர்.

வெளியில் பார்க்க சாதாரணமாக தெரியும் ஆனால் உள்ளே வந்தால் பிரமிக்க வைக்கும். மேலும் இந்த கிராமத்திற்கு, 25 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இருந்து பைப் மூலம் நிலத்திற்கு அடியிலேயே நீரை கொண்டுவந்து பயன்படுத்திவருகின்றனர். இந்த கிராம மக்களின் அழகிய வாழ்க்கை முறை அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read more ; சோடியம் வழிகாட்டுதல்களை வெளியிட்ட WHO.. இந்தியாவில் 3 லட்சம் இறப்புகளை தடுக்கலாம்..!!

English Summary

A different city under the ground.. From church to cinema there are all facilities..!! Do you know where?

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Fri Nov 1 , 2024
Tamil Nadu Sales Tax Appellate Tribunal has released a new notification regarding employment.

You May Like