fbpx

விஜய்யை தொடர்ந்து புதிய அரசியல் கட்சி துவங்கும் பிரபல நடிகர்..!! தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி..?

புதுச்சேரியில் கொரோனா காலத்தின்போது சினிமா படப்பிடிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, இயக்குநர் பாக்யராஜ் முதல்வரை ரங்கசாமியை சந்தித்து கட்டணத்தை குறைக்குமாறு வலியுறுத்தியிருந்தார். அந்த வகையில், நாளொன்றுக்கு சினிமா படப்பிடிப்பிற்கு ரூ.22,000இல் இருந்து ரூ.17,000ஆகவும், சின்னத்திரை படப்பிடிப்பிற்கு ரூ.18,000இல் இருந்து ரூ.10,000ஆகவும் குறைத்து முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி சென்ற இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து சினிமா படப்பிடிப்புக்கான கட்டணங்களை குறைத்ததற்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தனுஷ்- நயன்தாரா மோதல் என்பது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்ப்பது போன்று ஆர்வமாக இருந்தது.

சினிமா துறையில் விவாகரத்து அதிகளவில் பெருகி வருகிறது. விவாக வருடம் என்பதை விவாகரத்து வருடமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் உலகில் மிகச் சிறந்த மனிதர். அவருடைய குடும்ப விவகாரத்தை யாரும் பெரிதுப்படுத்தி இருக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. எனது கருத்து” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் மாநாடு பிரமாதமாக நடைபெற்று முடிந்துள்ளது. விஜய் அரசியலுக்கு வந்திருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆளும் கட்சியான திமுகவை விஜய் எதிர்ப்பதுதான் சரியான விஷயம் தான். எம்ஜிஆர் போன்றோர் ஆளும் கட்சியை எதிர்த்துதான் அரசியல் செய்திருக்கிறார்கள்.

எனவே, ஆளும் கட்சியை எதிர்த்தால்தான் கதாநாயகனாக வர முடியும். நான் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் விரும்புகின்றனர். ஆனால், அது முறையாகும் போது நான் அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார். பார்த்திபனின் இந்த கருத்துகள் தமிழ் சினிமா துறையிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை கிளப்பியுள்ளன.

Read More : தன்னை விட 9 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்கிறார் பிரபல நடிகரின் மகன்..!! யார் தெரியுமா..?

English Summary

“Many people want me to enter politics. But I will announce it when it is appropriate,” said actor Parthiban.

Chella

Next Post

மாணவர்களே ரூ.10,000 வழங்கும் தமிழ்நாடு அரசு..!! ஜனவரி 25ஆம் தேதி தேர்வு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Nov 28 , 2024
It has been announced that the “Tamil Nadu Chief Minister’s Aptitude Test” for 10th grade students will be held on January 25th.

You May Like