மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்(27) ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 1 ஒருநாள் போட்டி மற்றும் 8 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் உத்கர்ஷா என்பவரை காதலித்து வந்தநிலையில் இவர்களின் திருமணம் வரும் ஜூன் மாதம் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து லண்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் கூடுதல் வீரராக கெய்க்வாட் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவரது திருமணத்திற்காக அவர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக இவர் ஆடி வருகிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்காக கேப்டன் ரோகித்சர்மா, இஷான்கிஷன் ஆகியோர் இன்று அதிகாலையில் லண்டன் புறப்பட்டுச் சென்றனர். சூர்யகுமார்யாதவ், ஜடேஜா, சுப்மன்கில், முகமதுஷமி உள்ளிட்டோர் இன்று ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு நாளை மறுநாள் லண்டன் புறப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.