fbpx

கோயிலில் வெடித்த சண்டை..!! அசிங்க அசிங்கமாக திட்டிய ஜிபி முத்து..!! வெளியான வீடியோ..!!

டிக்டாக் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. துவக்கத்தில் டப்ஸ்மாஸ் வீடியோக்களை வெளியிட்டு, பின் பாடலுக்கு நடனமாடி வீடியோ போட்டார். ஒருகட்டத்தில் ரவுடி பேபி சூர்யா போன்ற சிலருடன் இணைந்து வீடியோ வெளியிட்டார். அதோடு, அவர்களோடு சண்டை போட்டும் வீடியோ போட்டார். கோபம் வந்தால் அசிங்கமாக கெட்டவார்த்தையில் பேசுவது ஜிபி முத்துவின் வழக்கம்.

டிக்டாக் ஆப்-பிற்கு தடை வந்ததும் இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கம் வந்தார். இவரை எல்லோரும் காமெடி பீசாகவே பார்ப்பார்கள். ஆனால், அதை வைத்து காசு சம்பாதித்து வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டார். இவரின் ஒவ்வொரு வீடியோவும் பல லட்ச வியூஸ்களை பெற்று வருகிறது. இவருக்கு பலரும் கடிதம் அனுப்புவார்கள். அதோடு, கண்டதையும் வைத்து பார்சலும் அனுப்புவார்கள். அதை என்ன என எடுத்து பிரித்து பார்ப்பதையும், கடிதங்களை படித்து பார்ப்பதையும் வீடியோவாக போட்டு கல்லா கட்டினார் ஜிபி முத்து.

இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்செந்தூர் அருகே உடன்குடி வெங்கடாச்சலபுரத்தில் பிரம்மசக்தி அம்மன் கோவில் உள்ளது. இது ஜிபி முத்து குடும்பத்தினருக்கு சொந்தமான கோவில் ஆகும். இங்கு தூத்துக்குடியை சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். தமிழ் மாதத்தின் முதல் நாளில் அங்கு பூஜை நடக்கும். அப்போது ஜிபி முத்து மற்றும் மகேஷின் குடும்பத்தினர் பங்கேற்பார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை புரட்டாசி முதல் நாள் என்பதால் பூஜை நடைபெற்றது. அப்போது மகேஷின் குடும்பத்தினர் அங்கே வந்துள்ளனர். அப்போது, மகேஷுக்கும், ஜிபி முத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை வெடித்துள்ளது. எனவே, ‘இனிமேல் நீ இங்கே பூஜை செய்யக்கூடாது’ என மகேஷிடம் சொல்லி இருக்கிறார் ஜிபி முத்து. இதையடுத்து, மகேஷ் குடும்பமும் ஜிபி முத்து குடும்பமும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். ஆத்திரமடைந்த ஜிபி முத்து மகேஷை மிகவும் தரக்குறைவான மற்றும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதை சிலர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட, அது தற்போது வைரலாகி வருகிறது.

Read More : 28 மாணவிகள்..!! கை, கால்களை கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த கேமராமேன்..!! 2-வது மனைவி உடந்தை..!! அதிரும் ஆந்திரா..!!

English Summary

An enraged GB Muthu scolds Mahesh with very degrading and ugly words.

Chella

Next Post

வேலை வாய்ப்பை அறிவித்த IGCAR.. 190 காலி பணியிடங்கள்.. ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

Thu Sep 19 , 2024
There are 198 vacancies for Trade Apprentices. Full details about this task are given below. Interested candidates can apply.

You May Like