fbpx

சூப்பர் வாய்ப்பு…! வேலை இல்லாத நபர்களுக்கு… இன்று காலை 9 முதல் 3 மணி வரை…! மிஸ் பண்ணிடாதீங்க

தருமபுரியில் இன்று இலவச வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிசேவைகள். காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 75-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5,000-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசமானதாகும்.

மேலும் விவரங்களுக்கு, dpijobfair2024@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 04342-296188 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. எனவே, காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

English Summary

A free employment camp is going to be held in Dharmapuri today.

Vignesh

Next Post

முழங்கால் வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்கள் வீட்டில் இருக்கும் இந்த 3 பொருளே போதும்..!!

Sat Oct 5 , 2024
Looking at today's lifestyle, people's health is declining.

You May Like