fbpx

மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் கும்பல்..!! புகாரளித்த பெண் படுகொலை..!! திடுக்கிடும் சம்பவம்..!!

கேரளாவில் கணவன், மனைவிகளை மாற்றி இன்பம் காணும் கும்பல் குறித்து போலீசிடம் புகாரளித்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது கணவர் தம்பதிகளை மாற்றி இன்பம் அனுபவிக்கும் கும்பல் நடத்தி வரும் சமூக வலைத்தளக்குழுவில் உறுப்பினராக உள்ளார் என்றும், தன்னை மற்றொருவருடன் உல்லாசம் அனுபவிக்க வற்புறுத்துகிறார் என்றும் கூறியிருந்தார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது கேரளாவைச் சேர்ந்த சிலர் இதுபோன்று தம்பதிகளை மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவிக்கும் குழுக்களை தொடங்கியுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான தம்பதிகள் உறுப்பினராக இருந்துள்ளனர். Couples Meet என பெயரிடப்பட்ட இந்த குழுவில் விருப்பத்தின் பேரிலும், கட்டாயத்தின் பேரிலும் தம்பதியினர் குறிப்பிட்ட இடத்தில் ஒன்று கூடுவார்கள். அங்கு ஆண், பெண் தங்கள் ஜோடிகளை மாற்றிக் கொள்வார்கள். இந்த தகவல் கேரளா மட்டுமின்றி இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசாரின் விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த குழுவில் இருப்பவர்கள் பற்றியும் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே, தம்பதிகளை மாற்றிக் கொள்ளும் கும்பல் பற்றி போலீசில் புகார் கொடுத்த பெண் தன் கணவரை பிரிந்து கோட்டயம் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரது வீடு பூட்டிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அப்பெண் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை செய்தவர் யார் என விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த அப்பெண்ணின் உறவினர்கள் இந்த கொலைக்கு காரணம் அவரது கணவர் தான் என கூறினர். இதனால் சந்தேகத்தின் பேரில் கணவர் வீட்டிற்கு சென்ற போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி கிடந்தார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை முயன்றாரா கணவர்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்து வருகின்றனர்.

Chella

Next Post

பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு TVS நிறுவனத்தில் வேலை…! 4 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும்…!

Sun May 21 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Territory Sales Manager பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 4 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]

You May Like