மொத்தமே 5 நாள் தான் பழக்கம். அதற்குள் ஒருவனை நம்பி அவனது அறைக்கு சென்றிருக்கிறாள் கவிதா. ஏற்கனவே ஸ்வப்னா என்ற பெண்ணுடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த அபு பக்கர், கவிதாவின் கை தனியாக, தலை தனியாக வெட்டி வைத்திருக்கிறான். அடுத்த தலைமுறை குறித்த பகீர் சம்பவங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. பாஸ்ட் புட் உணவுகளைப் போலவே, இவர்களது காதல், கல்யாணம், விவாகரத்து, விரக்தி என அனைத்தும் அத்தனை பாஸ்ட்டாக கடந்து சென்று விடுகிறது.
டெல்லியில் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்த ஷ்ரத்தாவை காதலன் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக நாய்களுக்கு வீசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதே போல் ஒரு சம்பவம் வங்கதேசத்தில் அரங்கேறியுள்ளது. வங்கதேசத்தில் கவிதா ராணி என்ற இளம் பெண்ணை அறிமுகமான 5 நாட்களிலேயே வீட்டிற்கு வரவழைத்து, அபுபக்கர் கொடூரமாக கொலை செய்துள்ளான். கவிதா ராணி, அபுபக்கரின் வீட்டிற்கு சென்ற நிலையில், இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கழுத்தை நெரித்து கவிதாவைக் கொன்றுள்ளான். அதன் பின்னர், சாவகாசமாக தலையை துண்டித்து உடல், கைகள் என தனித்தனி துண்டுகளாக வெட்டி வைத்திருக்கிறான். கவிதா ராணியின் கைகளைத் தனியே பிளாஸ்டிக் கவரில் போட்டி, வீசி எறிந்த அபு, தலையை வெட்டி பிளாஸ்டிக் பாலிதீன் கவரில் போட்டு வைத்திருந்திருக்கிறான்.
இதுகுறித்து காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், அபுபக்கரும் ஸ்வப்னாவும் கோபர்சகா சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4 வருடங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்தனர். ஸ்வப்னா வேலைக்காக வெளியே சென்றிருந்த போது அபு பக்கர் வீட்டிற்கு கவிதா சென்றுள்ளார். அப்போது ஸ்வப்னாவுடனான காதலை மறைத்தது குறித்து கவிதாவுக்கும் அபு பக்கருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் கவிதா ராணியைக் கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசி எரிந்ததாக அபு பக்கர் விசாரணை ஒப்புக் கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.