fbpx

வெளிநாட்டிலிருந்து பரிசு..!! கன்னியாகுமரிக்கு வந்த அந்த ஃபோன் கால்..!! ரூ.10 லட்சத்தை சுருட்டிய வடமாநில இளைஞர்கள்..!!

பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் வெளிநாட்டிலிருந்து இலவச பரிசு பொருட்கள் தருவதாக கூறி நம்ப வைத்து சுங்க தேர்வை மற்றும் வரிகள் செலுத்த வேண்டும் என பல்வேறு கட்டங்களாக 9,49,000 ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

வெளிநாட்டிலிருந்து பரிசு..!! கன்னியாகுமரிக்கு வந்த அந்த ஃபோன் கால்..!! ரூ.10 லட்சத்தை சுருட்டிய வடமாநில இளைஞர்கள்..!!

விசாரணையில் உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் குமார் (23) மற்றும் அமான் கான் (19) ஆகிய இருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் விரைந்த குமரி சைபர் போலீசார், எட்டாவா மாவட்டம் சென்று இரு குற்றவாளிகளையும் கைது செய்து கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

என்னது ஸ்கூலுக்கு லீவு இல்லையா? நாளை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

Fri Dec 16 , 2022
எப்போதும் மழைக்காலங்களில் பருவ மழை அதிகமாக பெய்தால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம்தான். அந்த மழையின் காரணமாக, மாணவர்கள் எந்த விதத்திலும் படிப்பை காரணம் வைத்து பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும். எனினும் மழைக்காக, மழைக்காலங்களில் விடப்படும் விடுமுறையை ஈடு கட்டும் விதத்தில் விடுமுறை தினங்களிலும் பள்ளிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், மழைக்காக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் விதத்தில் சென்னையில் நாளைய தினம் பள்ளிகள் […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like