கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள மருதூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
அவரின் வீட்டிற்கு பக்கத்தில் 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வந்துள்ளார். சிறுமிக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் சேகர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்தனர்.