Padiyal village: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) 2024 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இறுதி முடிவை வெளியிட்டுள்ளது. இதில், பொதுப் பிரிவைச் சேர்ந்த 335 பேர் உட்பட மொத்தம் 1009 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் இந்திய அரசு மற்றும் அதன் கீழ் உள்ள பல்வேறு சேவைகளில் பணியமர்த்தப்படுவர். ஆனால் இந்தியாவில் இந்த ஒரு கிராமத்தில் தற்போது 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளனர். இது தவிர, இங்குள்ள கல்விச் சூழல், 7 குழந்தைகளில் 4 பேர் NEET போன்ற கடினமான மருத்துவ தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். மீதி உள்ள 3 குழந்தைகள் IIT JEE போன்ற இன்ஜினியரிங் தேர்வுகளில் எளிதாக தேர்ச்சி பெறுகிறார்கள்.
இந்த கிராமம் எங்குள்ளது என்றால், மத்தியப்பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில், தொலைதூர பகுதியில் அமைந்துள்ள படியால் (Padiyal) என்னும் பழங்குடியினர் ஆதிக்கம் கொண்ட கிராமம், இன்று “அதிகாரிகளின் கிராமம்” (Village of Officers) என்ற பெயரில் பிரபலமாகியுள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பலர் UPSC, NEET, JEE போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்று IAS, IPS, ஆசிரியர்கள், போலீசார், அதிகாரிகள் ஆகிய பதவிகளில் உள்ளனர்.
படியால் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அரசு ஊழியர், பொறியாளர் அல்லது மருத்துவராக ஆகவேண்டும் என்ற ஆர்வத்துடன் வளர்கின்றனர். இந்த கிராமத்தின் கல்வி சூழல் மற்றும் சமூகப் பரிமாணங்கள், இந்த பெரும் கனவுகளுக்கான அடித்தளமாக உள்ளன. மல்வா மண்டலத்தில் உள்ள பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் படியால் கிராமம், இதன் மொத்த மக்கள் தொகை 5,000க்கு மேல் என்றாலும், இங்கிருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.
இந்தக் கிராமத்தின் மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் பில்(Bhil) பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். பில் இனத்தவர்கள் மத்தியப் பிரதேசத்தின் தார், ஜாபுவா மற்றும் மேற்கு நிமர் மாவட்டங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் துலே மற்றும் ஜல்கான் உள்ளிட்ட மத்திய இந்திய மாநிலங்களில் வாழும் ஒரு இன சமூகமாகும். அவர்கள் ராஜஸ்தானிலும் காணப்படுகின்றனர்.
மத்தியப் பிரதேச அரசின் கூற்றுப்படி, பாடியல் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இரண்டு ஆண்டுகள் முன், படியால் கிராமத்தில் நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கை 70 ஆக இருந்தது. ஆனால் 2024ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 100ஐ கடந்துவிட்டது. படியால் கிராமம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய சாதனையை கொண்ட கிராமமாக விளங்குகிறது, ஏனெனில் இந்த கிராமத்தில் இருந்து கீழ் நீதிமன்ற நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், இந்திய பொறியியல் சேவை அதிகாரிகள்(IES), மருத்துவர்கள், வழக்கறிஞர் அதிகாரிகள், வன அதிகாரிகள் என பல துறைகளில் பணியாற்றுகின்றனர்.
பில் பழங்குடியினரால் நிரம்பிய இந்த படியால் கிராமம், அதன் கல்வி தரம் மற்றும் சேர்க்கை விகிதம் மிகப்பெரிய முன்னேற்றத்தை காட்டுகிறது. இவ்விதத்தில், இந்த கிராமத்தின் கல்வி தரம் சரியான முறையில் மதிப்பிடப்பட்டது, ஏனென்றால் 7 பள்ளி மாணவர்களில் 4 பேர் NEET தேர்வை வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றனர், மேலும் மற்ற 3 பேர் JEE Mains தேர்வை வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றனர்.
மத்தியப்பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, படியால் கிராமத்தில், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அரசு ஊழியர் உள்ளதாக கூறப்படுகிறது, இதன் மொத்த எண்ணிக்கை 300 ஆக உள்ளது. இந்தக் கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், இங்கு உள்ள இளைஞர்கள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து போட்டித் தேர்வுகளுக்கு தேர்ச்சி பெறும் நோக்கத்தில் போட்டியில் பங்கேற்க தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: சோகம்…! திடீரென சுருண்டு விழுந்த வனக்காப்பாளர் உயிரிழப்பு…! வனத்துறை விசாரணை