ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதே போல் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். குறிப்பாக மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி அறிவித்துள்ளார்.