fbpx

கள்ளக்காதலி வீட்டிலேயே செட்டிலான கணவன்..!! மனமுடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (40). இவர், கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமலா (35). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக ராஜா வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் ராஜா சரியாக வீட்டிற்கு வருவதில்லை. இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அமலா மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமலா விஷம் குடித்துவிட்டு வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிய நிலையில் கிடந்தார். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாமியார் மற்றும் மாமனார் அமலாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Chella

Next Post

500 கி.மீ. ஓடிய பைக்கை வாடிக்கையாளர் தலையில் கட்ட பார்த்த ஓலா நிறுவனம்..!! திடுக்கிடும் பின்னணி..!!

Tue Apr 18 , 2023
சென்னை கொண்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஷோரூமுக்கு பைக் வாங்க சென்றிருக்கிறார். ஆசை ஆசையாக பைக் வாங்க வந்த ஸ்ரீதர், முதற்கட்டமாக ரூ.25 ஆயிரம் செலுத்தியதோடு எஞ்சிய பணத்தை ஓலா நிறுவனம் மூலமே ஐடிஎப்சி வங்கியில் லோன் போட்டு செலுத்தியிருக்கிறார். வங்கியில் வாங்கிய கடனுக்கு இஎம்ஐ தொகையை செலுத்த தொடங்கிய ஸ்ரீதருக்கு, வண்டி மட்டும் கிடைத்த […]

You May Like