fbpx

’தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடிக்கிறது’..! அமைச்சரை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்..!

“ஆவின் பால் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என்றும் துறை ரீதியான விசாரணையால் நியாயம் கிடைக்காது” என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சர்க்காரியா கமிஷனால் குற்றவாளி என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள். விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வது திமுகவினருக்கு கைவந்த கலை. அதிலும், குறிப்பாக பால்வளத்துறை அமைச்சர் நாசர், விஞ்ஞானப் பூர்வமாக தங்களது முன்னோர் வழியில் பால் பாக்கெட்டில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய பாலின் அளவைக் குறைத்து அதன்மூலம் ஆதாயம் தேடியுள்ளார்.

’தினந்தோறும் ஐந்தரை லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடிக்கிறது’..! அமைச்சரை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்..!
நாசர் – பால்வளத்துறை அமைச்சர்

தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் விற்பனை ஆகிறது. அதில், தினசரி ஐந்தரை லட்சம் லிட்டரை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது. அந்த பூனைக்குட்டி குடித்த பாலின் விலை ஒரு நாளைக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய். வருடத்திற்கு 800 கோடி ரூபாய். அரை லிட்டர் பால் பாக்கெட்டில் 75 கிராம் அளவுக்கு எடை குறைவாக உள்ளது. ஆவின் பால் பாக்கெட் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். துறை ரீதியான விசாரணை என்பது எந்த வகையிலும் நியாயம் கிடைக்கச் செய்யாது”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

’இந்தாண்டு சுதந்திர தின விழாவில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்’..! தமிழக அரசு அறிவிப்பு

Wed Aug 3 , 2022
ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக அரசால் நடத்தப்பட இருக்கும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது பொதுமக்களும் பங்கேற்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தமிழக அரசால் நடத்தப்படும் எந்த பொதுவிழா, கொண்டாட்டங்களிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழக அரசால் நடத்தப்பட இருக்கும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது பொதுமக்களும் பங்கேற்கலாம் என தமிழக […]
’இந்தாண்டு சுதந்திர தின விழாவில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம்’..! தமிழக அரசு அறிவிப்பு

You May Like