fbpx

தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன்..!! அண்ணாமலை பரபரப்பு தகவல்..!!

தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழக அரசு 2022-23ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து ஒரு லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகமான கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது. அதன்பிறகு தமிழக அரசு மக்கள் ஐடி என்ற ஒன்றை புதிதாக கொண்டு வர முயற்சி செய்கிறது.

தமிழகத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் தலா ரூ.2.62 லட்சம் கடன்..!! அண்ணாமலை பரபரப்பு தகவல்..!!

இது ஆதார் செய்யாத வேலையை செய்யப் போகிறதா?. 99.5% மக்களிடம் ஆதார் உள்ளது. பல்வேறு திட்டங்கள் ஆதார் மூலம் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு மக்கள் ஐடி மூலம் என்னென்ன செய்யப்போகிறது..? தமிழகத்தில் மட்டும் தான் வாரிசு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

பொங்கல் பரிசுத்தொகை..!! சொன்ன தேதியில் வாங்க முடியாதவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா..?

Fri Jan 6 , 2023
டோக்கன் பெற முடியாதவர்கள் மற்றும் விடுபட்டு போனவர்கள் ஜன.13ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் […]

You May Like