fbpx

கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்பு….! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது முக்கிய ஆன்லைன் டெலிவரி நிறுவனம்….!

இன்றைய காலகட்டத்தில், அனைவரும் நமக்கு எந்த பொருள் தேவை என்றாலும், நாம் கடைக்கு சென்று வாங்குவதை விட கைபேசி மூலமாகவே, ஆர்டர் செய்து, வீட்டிற்கு அந்த பொருளை வரவழைப்பது வழக்கம் ஆகிவிட்டது.

அந்த வகையில், பிரபல இணையதள வர்த்தக நிறுவனமான மீஷோ, ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, எதிர்வரும் பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

சென்ற வருடம் இந்த நிறுவனம் ஏற்படுத்திய பருவ கால வேலைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இது 50% அதிகம் என்று கூறப்படுகிறது. மக்களிடையே தேவைகள் வளர்ந்து வருவதால், அவற்றை பூர்த்தி செய்வதற்காக தன்னுடைய விற்பனையாளர்கள் மற்றும் தளவாட நெட்வொர்க்கில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

Express dtdc, elasticunload, sharedelivery, shadowfax, expressbees உள்ளிட்ட நிறுவனங்களோடு, தன்னுடைய பார்ட்னர்ஷிப் மூலமாக சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை செயல்படுத்துவதை தன்னுடைய நோக்கமாக கொண்டிருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்புகளில் ஆறுவது சதவீதத்திற்கும் அதிகமானவை. மூன்றாம் அடுக்கு மற்றும் நான்காம் அடுக்கு பகுதிகளை சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிலும், குறிப்பாக டெலிவரி எடுப்பது, வரிசைப்படுத்துவது, ஏற்றுவது, இறக்குவது மற்றும் திரும்பும் ஆய்வுகள் உள்ளிட்ட பணிகளுக்கு பொறுப்பான டெலிவரி நண்பர்களை உள்ளடக்கியதாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பல்வேறு நிறுவனங்கள் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் இடையே ஏற்படும் அதிக தேவையை சமாளிப்பதற்கு தயாராகி வருவதன் காரணமாக, நாட்டில் டெலிவரி செய்யும் துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று பணியாளர் தீர்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பொருட்கள் டெலிவரி செய்வதில் கடைசி மைல் டெலிவரி ஸ்பேஸ் மற்றும் கிடங்கு செயல்பாடுகளில் சுமார் 2 லட்சம் திறந்த நிலைகள் நாட்டில் இருக்கின்றன. இது டிசம்பர் மாதத்தில் 7 லட்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதோடு,சென்ற வருடம் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த வருடம் பண்டிகை கால பணியமர்த்தல், டெலிவரி செய்யும் பணிகளில் குறிப்பிடத்தக்க 25 சதவீதம் அதிகரிக்கும் என்று அனைவராலும், எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த துறையின் நேர்மறையான உணர்வுகள் மற்றும் நம்பிக்கையான கண்ணோட்டத்தை அதிகரிப்பதற்கான கனவுகளை பிரதிபலிக்க செய்கிறது. கிடங்கு செயல்பாடுகளுக்கான தேவை கடைசி மைல் பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களான, முதல் அடுக்கு நகரங்களோடு, ஒப்பிட்டு பார்க்கும்போது, டெலிவரி பணியாளர்கள் மற்றும் கால் சென்டர் ஆபரேட்டர்கள், இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

Flipkart நிறுவனம் சமீபத்தில், தன்னுடைய விநியோக சங்கிலியில், ஒரு லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தது. இதே போல, எதிர்வரும் மாத தொடக்கத்தை பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, அந்த நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் இருக்கின்ற விநியோக செயின் முழுவதும் லட்சக்கணக்கான பண்டிகைக்கால வேலைகளை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

Next Post

”வீட்டையே இரண்டா மாத்திட்டோம்.. விளையாட்டு என்னவாகும்”..? கமல்ஹாசனின் புதிய வீடியோ..!!

Wed Sep 27 , 2023
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சியானது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன்-7 சமீபத்தில் ஆரம்பமானது. இதையடுத்து, வரும் 1-ஆம் தேதி தமிழ் பிக்பாஸ் சீசன்-7 ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த ஒவ்வொரு ப்ரோமோ வீடியோவும் தற்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், […]

You May Like