fbpx

பண்ணை வீட்டில் தனிமையில் தூங்கிய காதல் ஜோடி..!! திடீரென நடுவில் படுத்த ரூம்பாய்..!! பதறியடித்த ஓடிய இளம்பெண்..!!

சென்னை கல்பாக்கம் அருகே கூவத்தூரை அடுத்துள்ள பரமன்கேனியில் பண்ணை வீடு நடத்தி வருபவர் காதல் பட நடிகை சந்தியாவின் கணவர் வெங்கடேசன். இந்த பண்ணை வீட்டில் சில் க்ளைமேட், கடற்கரை ஓரம், நீச்சல் குளத்துடன் கூடிய வசதி என காதலர்கள் முதல் குடும்பஸ்தர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு தளமாக இருந்து வருகிறது. இந்த பண்ணை வீடு சனி, ஞாயிறுகள் தொடங்கி ரிலாக்ஸ் செய்பவர்கள், குடும்பத்துடன் ஓய்வாக பொழுதை கழிக்க விரும்புபவர்கள் என பலரும் அடிக்கடி வந்து தங்கி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சென்னையை சேர்ந்த 25 வயது இளைஞர், தனது காதலி மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து, இந்த பண்ணை வீட்டில் 3 அறைகள் எடுத்து தங்கியுள்ளார். அங்கு, தனது காதலியுடன் இளைஞர் தனியாக அறை எடுத்த நிலையில், அங்கு ரூம்பாயாக சீக்கினாங்குப்பத்தை சேர்ந்த சுபாஷ் என்பவர் வேலைபார்த்து வருகிறார். பகலில் காதலி மற்றும் நண்பர்களுடன் Vibe செய்து டையர்டாக இருந்த இளைஞர் ஒருவர் இரவில் தனது காதலியுடன் அறையில் தூங்கியுள்ளார். இவர்கள் தங்கியிருந்த அறை உள்பக்கம் தாழிட்டு கொண்டனர். இருந்தாலும், வெளிப்பக்கம் மூலம் எளிதாக திறக்கும் தாழ்ப்பாளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்திருந்த ரூம் பாய் சுபாஷ், இரவு தூங்கி கொண்டிருந்த காதலர்களின் அறைக்குள் நைசாக நுழைந்தார். காதலர்களுக்கு நடுவில் படுத்து அருகில் படுத்திருந்த பெண்ணிடம் அவரது காதலனாக தன்னை காட்டிக் கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடத் தொடங்கினார். வித்தியாசமான உணர்வுகள் நிகழ்ந்ததால் உடனே எழுந்து அறையின் லைட்டை ஆன் செய்தார் காதலி. அருகில் காதலன் நன்கு தூங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, பெண் கூச்சலிட்டதை கேட்டு அவரது காதலன் உட்பட அனைவரும் எழுந்தனர். அப்பெண் நடந்ததை கூற காதலன், நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அறை முழுவதும் தேடியதில் கட்டிலுக்கு அடியில் மறைந்திருந்த ரூம் பாயை பிடித்து அவரை நையப் புடைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

இளைஞர்கள் மற்றும் அவரது நண்பர்களின் தாக்குதலால் காயமடைந்த சுபாஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்காக சுபாஷின் செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில், இதுவரை பண்ணை வீட்டில் தங்கிச் சென்ற பல பெண்களின் ஆபாச வீடியோக்கள், குளியலறை வீடியோக்களைக் கண்டு அதிர்ந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சுபாஷிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட விசாரணையில் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டு ஏகப்பட்ட உண்மைகள் வெளிவரக்கூடும் என போலீசார், முதற்கட்ட தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Chella

Next Post

உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக தெரிவித்த மருத்துவர்களால் பீதி….! மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி ஆசிரியர்…..!

Sun May 21 , 2023
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (49) இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (45) இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் ஒரு மகன் என்று 3 குழந்தைகள் இருக்கின்றன. இத்தகைய நிலையில், செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தன்னுடைய உடலை பரிசோதனை செய்தார். அப்போது ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்வதில் அவருக்கு ரத்தத்தின் […]

You May Like