fbpx

வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! 2 நாளில் ஒரிசா பகுதி நோக்கி நகரும்…!

வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இரண்டு தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

கடந்த 13-ம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 18-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

இளம் தம்பதிகளே உங்கள் கைக்குழந்தையுடன் வெளியே செல்கிறீர்களா….? அப்படி என்றால் இது மிக, மிக அவசியம்….!

Fri Sep 15 , 2023
இன்றைய இளம் தலைமுறை தம்பதியினர் கைக்குழந்தையோடு வெளியே செல்லும்போது, பல்வேறு சிக்கல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே அவர்கள் எந்த விதமான சிரமமும் இன்றி கைக்குழந்தையோடு வெளியே சென்று வருவதற்கு, தேவைப்படுவது என்னென்ன என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது கைக்குழந்தையுடன் வெளியில் செல்லும்போது ஒரு சில விஷயத்தில் நிச்சயமாக கவனமுடன் இருப்பது மிகவும் அவசியமாகும். அதிலும் குறிப்பாக அந்த குழந்தைக்கு தேவையான பொருட்களை தனியாக ஒரு […]

You May Like