fbpx

மீண்டும் புயலா..? தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி…!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி 2 நாட்களில் நகரக்கூடும். இதன் காரணமாக நாளை கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும் தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 18-ம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் 17, 18-ம் தேதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

A low pressure area is forming over the southeastern Bay of Bengal today

Vignesh

Next Post

உங்க கூந்தலில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, இந்த ஒரு சட்னி போதும்.. வித்தியாசத்த நீங்களே பாப்பீங்க..

Mon Dec 16 , 2024
chutney for hairfall

You May Like