fbpx

தமிழகத்தை விட்டு விலகிச் சென்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி…! வானிலை மையம் புதிய அப்டேட்…!

காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் ஜனவரி 5ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு விருது கிடையாது...! பள்ளி கல்வித்துறை அதிரடி...!

Sun Dec 31 , 2023
குற்ற வழக்கில் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படும். இந்த விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் […]

You May Like