fbpx

வங்கக் கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..!!

தமிழ்நாட்டில் மதுரை, கோவை, டெல்டா உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 22ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும், 23ஆம் தேதி ஒருசில இடங்களிலும், 24 முதல் 26ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 23ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 24ஆம் தேதி நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 24ஆம் தேதி வாக்கில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, தமிழக, கர்நாடக கடலோரம், லட்சத்தீவு – மாலத்தீவு, மத்திய வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை அதிகபட்சம் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு கேரள கடலோரம், தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சம் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : மாதந்தோறும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வருமானம் பெற வேண்டுமா..? போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Chella

Next Post

Crime | ஆளில்லாத கடைக்குள் புகுந்த மர்ம கும்பல்..!! தட்டிக்கேட்ட வியாபாரியை வெட்டிப்போட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

Tue May 21 , 2024
வஉசி மார்க்கெட்டில் வியாபாரியிடம் தகராறு செய்த கும்பல், வியாபாரியை அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Crime | தூத்துக்குடி மாவட்டம் வஉசி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை வைத்திருப்பவர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் திசை கரைராஜா. நேற்றிரவு இவரது கடை அருகே உள்ள கார்த்திக் ராஜா என்பவரது கடைக்கு, திணை வாங்குவதற்காக 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அப்போது, அந்த கடையில் உரிமையாளர் இல்லாததால், […]

You May Like