fbpx

விரைவில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்….! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை……!

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை தமிழ்நாடு முழுவதிலும் தொடர்வதால் மக்கள் வெயிலின் தாக்கம் குறைந்து சற்றே நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

இத்தகைய நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகின்ற 7 மற்றும் 8 உள்ளிட்ட தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இன்றைய தினம் ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பத்தூர், வேலூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், திருப்பூர், திருச்சி, தஞ்சை, கரூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் போன்ற 24 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறது.

அதோடு வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு பகுதியில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு ஆந்திரா தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா கேரளா லட்சத்தீவு மற்றும் மாலத்தீவுகளில் சூறாவளிக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவரா நீங்கள்..? கட்டணம் அதிரடி உயர்வு..!! வாடிக்கையாளர்கள் ஷாக்..!!

Tue May 2 , 2023
சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் ஆண்டு சந்தாவும், டெலிவரி கட்டணமும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 50 விழுக்காடு உயர்ந்துள்ளது. உதாரணமாக, ஒரு சிக்கன் பிரியாணியை உணவகத்துக்கு நேரில் சென்று சாப்பிடும் போது 150 முதல் 250 ரூபாயாக இருக்கும். தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்யும் சந்தா இல்லாத வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 50 ரூபாய் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் சராசரியாக […]

You May Like