பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இரண்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில் சச்சின் என்ற ஊரில் தான் இந்தச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அப்பகுதியைச் சார்ந்த இரண்டு வயது பெண் குழந்தையை ஆளில்லாத வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறான் கமுகன் ஒருவன். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறது குஜராத் போலீஸ். அப்பகுதியில் உள்ள இரண்டு வயது பெண் குழந்தையை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இஸ்மாயில் என்ற நபரை பிடித்து விசாரித்த போது அவன் குழந்தையை கொலை செய்ததை ஒத்துக் கொண்டான்.
இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் தனது நண்பனின் மகளை தின்பண்டங்களை வாங்கி கொடுத்து ஏமாற்றி அருகில் உள்ள ஆளில்லாத வீட்டிற்கு அழைத்துச் சென்று இரண்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கிறான். இது தொடர்பாக அவனை கைது செய்துள்ள காவல் துறை ஆளில்லாத வீட்டிலிருந்து சிறுமியின் சடலத்தையும் கைப்பற்றி இருக்கிறது. அந்தப் பிஞ்சு குழந்தையின் வயிற்றுப் பகுதிகளில் பற்களின் தடங்கல் இருப்பதும் தடயவியல் துறையின் சோதனையில் தெரிய வந்திருக்கிறது. இரண்டு வயது குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் குஜராத் பகுதியில் அதிர்ச்சியையும் பயத்தையும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.